[

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கயிருக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. இந்த படத்தில் நாயகர்களாக ஜெயம்ரவி-ஆர்யா நடிக்க, சங்கமித்ரா என்ற டைட்டீல் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு பழங்கால சண்டை பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறி விட்டதாக அறிவித்தார்.

அதனால், தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளுக்கும் பசீட்சயமான நடிகை தேட வேண்டிய கட்டாயத்திற்கு சங்கமித்ரா டீம் தள்ளப்பட்டது. அதையடுத்து நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகளிடம் இரண்டு வருடத்திற்கு கால்சீட் பேசினர். ஆனால் இருவருமே ஏற்கனவே சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறினர்.

ஆனபோதும், நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சங்கமித்ரா படக்குழு, தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளனர். ஆனால் சங்கமித்ரா படத்தில் கமிட்டாகிவிட்டால் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு வேறு படத்தில் நடிக்க முடியாது. ஆகையால் அதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டாராம். அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கமித்ரா குழுவினர் இப்போதுவரை நயன்தாராவிடம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கவில்லையாம்.

Comments

comments