0

கேளிக்கை வரி விவகாரத்தில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். செவ்வாய்க்கிழமைக்குள் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்று விஷால் கூறியுள்ளார்.

கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணியுடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கேளிக்கை வரி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கேளிக்கை வரி குறித்து அமைச்சர்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த விவகாரத்தில் நாளைக்குள் தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர்கள் கூறினார்கள்” என விஷால் தெரிவித்தார்.

Comments

comments