1_12411

அஜித்துடன் விவேகம்’ மற்றும் விஜய்யுடன் ‘மெர்சல்’ படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Manchi Lakshanalunna Abbayi என்ற டைட்டிலில் சுருக்கம் தான் MLA.இந்த படத்தில் கல்யாண்ராம் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உபேந்திர மாதவ் இயக்கத்தில் புளூ பிளானெட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு மணி இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கடந்த சில நாட்களாக நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக விரைவில் காஜல் ,இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தமும் நடிக்கவுள்ளார்.

Comments

comments