DE3hH5eV0AQ6wID

கேரளாவைச் சேர்ந்த ஓமனப்பெண்ணான ஓவியாதான் இப்போதைய தமிழர்களின் கனவுக்கன்னி. காரணம், ஓவியாவின் கூலான ஆட்டிட்யூட். ஆனால் பிக் பாஸுக்காக என்றில்லை. ஓவியா அதற்கு முன்பிருந்தே அப்படித்தான். படிக்கும் காலத்தில் வாழ்க்கையைப் பற்றி எந்த ஐடியாவுமே அவருக்கு இருந்ததில்லை. யாராவது இவரிடம் வந்து ‘நீ என்னவா ஆகணும்?’னு கேட்டால் ‘எனக்கு என்ன ஆனாலும் ஓகேதான், எனக்கு எந்த ஐடியாவும் இல்லை’ என்று கூலாக பதில் சொல்லுவாராம். இவர் பெர்சனல் வாழ்க்கையிலும் பெரிதாக ப்ளானிங் என்று எதுவும் இருக்காதாம். அன்றைய நாள் சந்தோஷமாக இருந்தாலே போதும் என்றுதான் இருப்பார். க்ளாஸ் கட் அடித்து ஊர் சுற்ற பணம் வேண்டுமென்பதால் மாடலிங் செய்யத் தொடங்கினார். 2007 மிஸ் செளத் இந்தியா எனும் கான்ட்டஸ்ட் மூலம் லைம்லைட்டிற்கு வந்தார். மாடலிங் செய்து கொண்டிருந்த நேரத்தில் இவரின் புகைப்படத்தைப் பார்த்து இயக்குநர் சற்குணம், களவாணி படத்துக்கு அழைப்பு விடுத்தார். இப்படித்தான் அவரது சினிமாப் பயணம் தொடங்கியது.

பொதுவாக சினிமா என்றாலே எல்லோர் வீட்டிலும் தயங்குவார்கள். ஆனால் ஓவியா வீட்டில் கொஞ்சம் வித்தியாசமான பதில் கிடைத்தது. இவர் சினிமா ஆசையை சொன்னவுடனேயே வீட்டில் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்கள். காரணம், அவரின் அம்மா ஜான்சி. முதலில் மற்ற வீடுகளைப் போல இங்கேயும் அடி, திட்டுகள்தான். ஒரு கட்டத்திற்குப் பிறகு அம்மாவும் மகளும் நண்பர்களாகிவிட, சினிமா வாய்ப்பிற்கும் யோசிக்காமல் ஓகே சொன்னார் ஜான்சி. ‘என்ன படம் பண்ற?’, சம்பளம் எவ்வளவு?’ போன்ற சினிமா சம்பந்தமான கேள்விகளை ஓவியாவிடம் ஜான்சி கேட்டதே இல்லை.

oviya_1_13134

‘கலகலப்பு’ படத்தின் போது ஓவியாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பரிசோதனையில் அவருக்கு கேன்சர் எனத் தெரிய வர, மொத்த குடும்பமும் நொறுங்கிப் போனது. குடும்பத்தினரின் அக்கறையால் நோயிலிருந்து மீண்டார் ஜான்சி. ‘சரி, இனி முழு மூச்சா நடிக்கலாம்’ என ஓவியா முடிவெடுத்த நேரத்தில் ஜான்சியை மீண்டும் புற்றுநோய் தாக்கியது. இந்த முறை ஓவியா கொடுத்த விலை மிக அதிகம். அம்மாவின் மரணம், கேரியரில் ஏற்பட்ட சறுக்கல் என வெளிச்சத்திலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக ஓவியா விலகியிருந்த நேரத்தில் வந்ததுதான் ‘பிக் பாஸ்’ வாய்ப்பு. முதல் நாள் வாழைப்பழம் கேட்டது முதல் ‘கொக்கு நெட்ட’ என்ற பாடல் வரை இவர் செய்யும் ரகளைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டாகிவிட்டார்கள். அது அவர் பெற்ற ஓட்டுகளில் இருந்தே தெரிந்திருக்கும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி அதிரிபுதிரியாக இன்ட்ரோ கொடுத்தார் ஓவியா. ‘இங்க ஏன் வந்தீங்க?’ என கமல் கேட்ட கேள்விக்கு ‘சும்மா ஜாலியா இருக்கத்தான் வந்தேன் சார்’ என முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்தார். கமல் ‘உள்ளே சில ரூல்ஸ் இருக்கும், அதுல முதல் ரூல் இங்கிலீஷ்ல பேசக் கூடாது’ என்று சொல்ல, ‘நீங்க தமிழ்ல கேள்வி கேட்டா, நானும் தமிழ்ல பதில் சொல்றேன்’ என்று கமலையே கலாய்த்துவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் போனார் ஓவியா. உள்ளே நுழைந்ததும் எல்லோரிடமும் ஜாலியாக பேசி கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ‘பசிக்குது, ஒரே ஒரு வாழைப்பழம், க்ரீன் டீ போதும்’ என நடு இரவில் புலம்பி முதல் எபிஸோடிலேயே மீம் மெட்டீரியலானார். ஆனால், அதன்பின் நடந்ததெல்லாம் ‘ஓவியா ட்ராம்ன்ஸ்ஃபர்மேஷன்’.

133085_13157

பிக் பாஸ் வீட்டில் எல்லோருமே ஓவியாவைப் பற்றி ‘புரணி’ பேசத் தொடங்கினார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலையே படாமல் ஜாலியாகவே இருந்தார். பிடித்தால் பிடிக்கும், பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை’ என முகத்துக்கு நேர் அவர் சொன்னது வீட்டிற்குள் அவரை வில்லியாகவும், வெளியே நாயகியாகவும் மாற்றியது. சுற்றி இருப்பவர்கள் எப்படிப் பேசினாலும் அவரின் முகத்தில் சிரிப்பு லீவே போடாது. இதற்கே ஓவியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனால்தான் ஓட்டுகளை அள்ளிக் குவித்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் அம்மாவைப் பற்றி பேச்சு வந்தபோது அதை வைத்து சிம்பதி உருவாக்காமல் நிலைமையை பக்குவமாக கையாண்டார். ரசிகர்கள் யோசிக்காமல், ‘ஓட்டைப் போடு ஓட்டைப் போடு’ என மானாவாரியாக மார்க் போட்ட தருணமது. அவர் பிக் பாஸ் வீட்டில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, வெளியுலகில் அவர் ஏற்கெனவே வின்னர்தான்!

gFgyfN5n_400x400

Comments

comments