download (1)

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை ஓவியா, சக போட்டியாளரான நடிகர் ஆரவ்விடம் தன் காதலை பலமுறை கூறியுள்ளார்.

இருவரும் பலமுறை காதல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் தினம்தோறும் பிக்பாஸ் ஷோவில் தவறாமல் இருக்கும்.

இன்று ஒளிபரப்பப்பட்ட ஷோவில் ஓவியாவின் காதல் பற்றி ஆரவ் காயத்ரி ரகுராமுடன் பேசினார்.

“லவ்னா எப்படி இருக்கனும். சரி நான் யாரை பார்த்தாலும் லவ் பன்றேன்னு சொல்லிட்டு போய்டுவேன். லவ்னா அது கிடையாது, நேரம் எடுத்துக்கணும்.. ஒரு ஆளை புரிஞ்சிக்கணும். ஆறு மாசம் டைம் எடுத்து ஒருத்தரை புரிஞ்சுக்கணும்.. அதுக்கப்புறம் காதல் பண்ணனும்.. அவ (ஓவியா) வந்து சொல்றா ‘நான் உன்ன லவ் பண்றேன்’னு .. 5 நிமிஷம் டைம் தரேன் சொல்லுனு அவ சொன்னா. லூசாடி நீ? னு நான் கேட்டுட்டேன்” என ஆரவ் கூறினார்.

 

Comments

comments