Uy9H1O39bindhu

BiggBoss நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேவரெட் ஓவியா. ஒட்டுமொத்த இளைஞர்களும் ஓவியா தான் நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பிந்து மாதவி புதிதாக இணைந்துள்ளார். இந்த நிலையில் இன்று வந்த புதிய புரொமோவில் எலிமினேட் செய்ய ஆரவ், ஓவியா பெயரை கூறுகிறார். இது ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜுலியை, ஓவியா ஒரு விஷயத்தில் காயப்படுத்தியது தான் ஆரவ், ஓவியாவை எலிமினேட் செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், பிந்து மாதவி வந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், நடிகை காயத்ரி ரகுராமை எலிமினேட் செய்கிறேன் என்று கூறுகிறார். அவர் அனைவரையும் அடக்க வைக்க வேண்டும் எண்ணுகிறார் என்ற காரணத்தையும் கூறி காயத்ரியை நாமினேட் செய்கிறேன் என்கிறார்.

கடந்த ஒரு மாதமாக இது நாள் வரை எவரும் நாமினேட் செய்யாத காயத்ரி ரகுராமை தான் வந்த முதல் நாளிலேயே செய்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி.

Comments

comments