0

பிரேமம் படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். தமிழிலும் நேரம் என்ற படத்தை இவர் தான் இயக்கினார். தற்போது இசையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு செய்தி பரபரப்பாகி உள்ளது. அப்படி என்ன சொன்னார்…?

அதாவது, “முதல்வன் படத்தில் வருவது போன்று ஒரு நாள் முதல்வராக தமிழகத்தில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்குமானால், ஒருநாள் முதல்வராக கமல்ஹாசனை நியமிக்க வேண்டும். அந்த ஒருநாள் போதும் தன்னுடைய புதுமையான யோசனைகளால் தமிழக அரசை அடுத்தக்கட்டத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வார். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் தான். இதில் ஏதேனும் தவறு இருந்தால் இந்த குழந்தையை மன்னியுங்கள்” என்று கூறியுள்ளார்.

Comments

comments