Daily_News_8439251184464

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீற முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் அருகில் இருந்த ஆற்றில் விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நீலும் ஏரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். முசாஃபர்பாத் நகரில் இருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ள அத்முகம் டவுன் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் வாகனம் மீது குறி வைக்கப்பட்டது.

அத்துமீறல் உறுதி செய்யப்பட்டதும் பாகிஸ்தான் வாகனத்தை குறி வைத்து இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய வீரர்களின் துப்பாக்கி சூட்டில் கட்டுப்பாட்டை இழந்த பாகிஸ்தான் வீரர்கள் சென்ற வாகனம் ஏரியில் விழுந்தது. இதையடுத்து அதில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஒரு வீரரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையி்ல், மற்ற வீரர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லையின் அருகே பாகிஸ்தான் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய ராணுவத்தினர் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்களை மீது துப்பாக்கி சுடு நடத்தியதால் தான் அவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

Comments

comments