625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)

அபிராமி திரையரங்கில் இணைய டிக்கெட் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் ஏற்கனவே பல ரசிகர்கள் திரையரங்குகளை தவிர்த்து இணையத்தில் படம் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரியால் மேலும் 30 ரூபாய் அதிகமாகியுள்ளது.

மேலும் இணையத்தில் பதிவு செய்யும் போது மேலும் 30 ரூபாய் கட்டணமும் வசூலிப்பதால் 183 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் சென்னையின் பிரபல திரையரங்கான அபிராமி திரையரங்கில் இணையதள கட்டணத்தை ரத்து செய்துள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலேயே முதன்முறையாகும்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கும் அபிராமி ராமநாதனின் திரையரங்கம் தான் அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)

Comments

comments