மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் இவர்களது நண்பரான ஷாஜி நடேசன் ஆகியோர் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். இதில் ஆர்யா இந்த நிறுவனம் ஆரம்பித்தபின் தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்துகொண்டவர். உறுமி படம் தான் இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்த ‘தி கிரேட் பாதர்’ படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்தது

NTlrg_20170703155018544888
இதுபற்றி பிருத்விராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஆறு வருடங்களில் இந்த நிறுவனத்தில் நானும் ஒரு பாகமாக இருந்ததில், பெருமைப்படும் படங்களை கொடுத்ததில் மகிழ்ச்சி. தற்போது புதிய இலக்கை நோக்கி நான் நகரவேண்டிய சரியான தருணம் இதுதான் என நினைக்கிறேன்.. அதனால் இந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்.. அதேசமயம் இந்த நிறுவனத்தின் நலம் விரும்பியாக எப்போதும் இருப்பேன்.. ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர் இந்த நிறுவனத்தை இதேபோல தொடர்ந்து சிறப்பாக வழிநடத்த எனது வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் பிருத்விராஜ்.

Comments

comments