vishallingu

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள ‘சண்டக்கோழி 2′ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷால். அப்படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2′ பணிகள் வேகப்படுத்தியுள்ளார்கள்.

லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, இமான் இசையமைக்கவுள்ளார். ஆகஸ் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அரங்குகளில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மேலும், ஒரு புறம் படப்பிடிப்பு நடந்தாலும், மறுபுறம் இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Comments

comments