9KkttwOpnnna

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து செம்ம ஹிட் அடித்தது.

இந்தியாவிலேயே அதிகம் பேர் RT செய்த பர்ஸ்ட் லுக் என்ற பெருமையை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் Naana Thaana Veena Ponaa பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இதோ பாடலை முழுமையாக கேட்க இதை க்ளிக் செய்க…Naana Thaana Veena Ponaa Song..

அனிருத் எப்போதும் தனக்கென்று ஒரு பேவரட் ஹிட் டியூன் வைத்திருப்பவர், ‘பூமி என்ன சுத்துதே, தங்கமே உன்ன தான் தேடி வந்தேன்’ என்று பாடலின் மூலம் சிம்பிள் டியூனில் கலக்கியிருப்பார்.

அப்படி ஒரு சிம்பிள் டியூன், அதே நேரத்தில் இளைஞர்களுக்கு கேட்டதும் பிடிக்கும் விக்னேஷ் சிவனின் வரிகள், இவை இரண்டும் இணைந்து இந்த பாடலை கேட்டதும் பிடிக்க வைக்கின்றது.

இதில் குறிப்பாக ‘குட்டி சைசு புஷுவானம் கொழுத்தி’ லைன் பலரின் ரிங்டோனாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Comments

comments