_18494 (1)

தலைகுப்புற கிடக்கிறது தமிழ்சினிமா. ஹீரோக்களின் ஓவர் சம்பளம். தொழிலாளர்களின் நியாயமில்லா சம்பளம். ஆன் லைன் பைரசி, இவையெல்லாம் தயாரிப்பாளரின் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வதால், ‘நட்டப்படுற தொழிலு நமக்கெதுக்குடா?’ மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் இந்த பாழாய் போன ஜி.எஸ்.டி பிரச்சனையும் வந்து தொலைத்திருக்கிறது. மத்திய அரசு விதிக்கும் வரியை கூட கட்டிவிடலாம். இந்த மாநில அரசு வேற தனியா 30 பர்சென்ட் கேட்குதே என்று விழி பிதுங்கிப் போயிருக்கும் இவர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கங்கள் அறிவித்த திரையரங்க வேலை நிறுத்தத்தையும் ஆதரிக்க முடியாத நிலை.

‘இனிமே தியேட்டரையே நம்பிகிட்டு இருந்தா அவங்க நம்ம கழுத்தை இறுக்கிடுவாங்க’ என்று நினைத்தவர்கள், முதல் கட்டமாக எல்லா படங்களையும் டிடிஎச் முறையில் வெளியிட்டாலென்ன என்ற முடிவுக்கு வந்தார்களாம். அப்போது பேசப்பட்ட விஷயம்தான் இது. “முதலில் டி.டி.எச் முறையில் வெளியிடுகிற படம் பெரிய ஹீரோவின் படமாக இருக்க வேண்டும். அப்பதான் ஜனங்களின் பார்வை டிடிஎச் மீது திரும்பும்”.

“விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிற பெரிய படம்னா அது விவேகம்தான். முதல் கட்ட முயற்சியை அதே படத்திலிருந்து தொடங்கலாமே?” என்று ரகசியமாக விவாதித்தார்களாம். ஒரே நாளில் தியேட்டரிலும் டி.டி.எச் சிலும் விவேகத்தை வெளியிட்டாலென்ன என்ற யோசனைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா? அவரே ஒப்புக் கொண்டாலும் அப்படத்தின் ஹீரோ அஜீத் சம்மதிக்க வேண்டுமல்லவா? இப்படி அடுத்தடுத்து ஸ்பீட் பிரேக்கர்கள் இருப்பதால், மிக மெதுவாக காய் நகர்த்தப்படுகிறதாம்.

ஒருவேளை விவேகம் டீம் மட்டும் இதற்கு சம்மதித்து அந்த முயற்சி நிறைவேறினால், தமிழ் சினிமாவுக்கு
புது ரத்தம் பாய்ச்சப்பட்டுவிட்டது என்று அர்த்தம்!

Comments

comments