_18494 (1)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், ‘கோச்சடையா’, ‘விஐபி 2′ படங்களின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது ‘விஐபி 2′ படத்தின் புரமோஷன்களில் பிசியாக உள்ளார். இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த செளந்தர்யா ரஜினிகாந்த், ‘எந்த நடிகரை எதிர்காலத்தில் இயக்க விரும்புகின்றீர்கள்’ என்ற கேள்விக்கு அவர் ‘அஜித்’ என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதிலில் இருந்து அஜித் படத்தை இயக்க செளந்தர்யா ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை செளந்தர்யாவுக்கு கொடுப்பாரா?

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, அஜித்தின் 58ஆம் படத்தையும் வீரம்,வேதாளம் மற்றும் விவேகம் படம் இயக்கிய சிவா தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இதில் எது நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

comments