_L6A5105_11400

சிக்ஸ்பேக் ஃபர்ஸ்ட் லுக், மிரட்டலான டீசர், ‘சர்வைவா’ பாடல், ‘தலை விடுதலை’ பாடலில் அஜித்தின் உடற்பயிற்சி கிளிப்பிங்குகள் என ஏற்கெனவே எக்குதப்பாய் எகிறிக் கிடக்கும் ‘விவேகம்’ படம் பற்றிய எதிர்பார்ப்பை தன் பங்குக்கு மேலும் ஏற்றியுள்ளார் படத்தில் நடித்துள்ள நடிகை அக்ஷரா ஹாசன். அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஆகியோர் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் துரிதகதியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்னொருபுறம் படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக நடிகை அக்ஷரா ஹாசன் சென்னை வந்தபோது படம் பற்றிய சில விஷயங்களை மீடியாவில் பேசினார். ‘‘இது ஒரு வழக்கமான அஜித் படமாக இருக்காது. ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதொரு அனுபவத்தை ‘விவேகம்’ படம் தரும். படத்தில் என்னுடைய கேரக்டர் அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது!’’ என படம் குறித்த விஷயங்களை பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார் அக்ஷரா.

Comments

comments