sundeep’s_film_titled_aram_seidhu_pazhagu-740x431

சமூகப் பிரக்ஞையுடன் தமிழில் படம் எடுக்கும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சுசீந்திரன்.

இவரது முதல் படமான வெண்ணிலா கபடி குழு படம் தொடங்கி கடைசியாக இயக்கிய மாவீரன் கிட்டு வரை ஒவ்வெசாரு படத்திலும் சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்வார்.

என்ன பிரயோஜனம்?

மசாலாப்பட இயக்குநர்களுக்கு கிடைத்த வணிக வெற்றி இவருக்குக் கிடைக்கவில்லை.

இத்தனை படங்கள் இயக்கியும், ஒவ்வொரு படத்தை முடித்து வெளியிடுவது சுசீந்திரனுக்கு இன்னமும் போராட்டமாகவே இருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் – ‘அறம் செய்து பழகு’.

இந்தப் படத்தில் ‘மாநகரம்’ சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

அறிமுக நாயகியான மெஹரீன் பிர்சடா கதாநாயகியாக நடித்திருக்கிறார் .

தமிழ்ப்படமாக தொடங்கப்பட்ட ‘அறம் செய்து பழகு’ படம் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக மாறி இருக்கிறது.

தெலுங்கு டப்பிங்குக்கு c/o சூர்யா என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ஜூன் 12 அன்று நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

இப்படத்திற்கான தெலுங்கு தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

அறம் செய்து பழகு திடீரென்று தெலுங்குப்படமாக மாறியதுது ஏன்?

அறம் செய்து பழகு படம் ஒரு கட்டத்தில் பைனான்ஸ் பிரச்சனையில் தடுமாற ஆரம்பபித்திருக்கிறது.

இதை அறிந்த இப்படத்தின் கதாநாயகனான சந்தீப் கிஷன் 7 கோடி கொடுத்து அறம் செய்து பழகு படத்தை வாங்கிவிட்டார்.

சந்தீப் கிஷன் 7 கோடி கொடுத்தது படத்தை வாங்கியது தமிழை நம்பி அல்ல.

அவர் தெலுங்கில் ஓரளவுக்கு தெரிந்த முகம் என்பதால், நேரடி தெலுங்குப்படம்போல் விளம்பரம் செய்து தெலுங்கில் வெளியிடும் திட்டத்திலேயே அறம் செய்து பழகு படத்தை வாங்கி இருக்கிறார்.

எல்லோருக்கும் ஒரு கணக்கு இருக்கத்தான் செய்கிறது.

Comments

comments