2vs2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் 2.0 திரைப்படத்தை 15 மொழிகளில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகுபலி-2 வசூல் சாதனையை இந்தத் திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ் வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ல் எந்திரன் திரைப்படம் வெளி யானது. இதன் 2-வது பாகமாக 2.0 என்ற படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஜப் பான், கொரியா உள்பட 15 மொழியில் திரையிட முடிவு செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் வசூலில் ரூ.1,500 கோடியை கடந்து இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இந்தப்படம் உலகம் முழுவதும் 6,500 திரையரங்குகளில் வெளி யிடப்பட்டது. இந்தச் சூழலில் ரஜினியின் 2.0 திரைப்படத்தை 7,000-க்கும் மேற்பட்ட திரை யரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகுபலி-2ன் வசூல் சாதனையை 2.0 திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments

comments