[

தமிழில் தான் தயாரித்து நடித்து இயக்கிய உன் சமையல் அறையில் என்ற படத்தை, தற்போது ஹிந்தியில் தட்கா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்த படத்தில் தமிழில் தான் நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகர் நானா படேகரை நடிக்க வைத்து வரும் பிரகாஷ்ராஜ், சினேகா நடித்த வேடத்தில் ஸ்ரேயாவை நடிக்க வைத்திருக்கிறார். படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடித்து வருவது பற்றி ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்த சில படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அப்போது அந்த படங்களின் இயக்குனர்கள் ஏதாவது பிரச்னை செய்தால் அவரிடம்தான் அதுபற்றி கலந்து பேசுவேன். ஆனால் இப்போது அவரே இந்த தட்கா படத்தில் இயக்குனராகி விட்டதால், பிரச்னைகளை யாரிடம் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் ஸ்ரேயா. ஆனால் என்ன பிரச்னை என்பதை ஓப்பன் பண்ணாமல் ஸ்ரேயா பேசி வருவதால், அதுபற்றி பலவிதமான பரபரப்பு செய்திகள் யூகங்களின அடிப்படையில் பாலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது.

 

Comments

comments