spyd

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் ‘ஸ்பைடர்’ படத்தின் பார்வை சற்று முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. ‘ஸ்பைடர்’ என்ற தலைப்பை வைத்ததும், ‘ஸ்பை’ அதாவது ‘உளவாளி’ கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார் என்றுசொல்லப்பட்டது. ஆனால், இன்று வெளியான பார்வையைப் பார்க்கும் போது படத்தில் கருவியாக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்பைடர்’தான் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறப் போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை மகேஷ் பாபு விஞ்ஞானியாகவும், அவர் கண்டு பிடித்த கருவி ‘ஸ்பைடர்’-ம் சேர்ந்து ஆக்ஷ்னின் ஈடுபடலாம் எனத் தெரிகிறது. ‘ஸ்பைடர்’ன் இந்த பார்வையைப் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். நிச்சயம் மகேஷ் பாபு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தெலுங்குத் திரையுலகில் இந்த மாதிரியான ‘சயின்ஸ் பிக்ஷ்ன்’ படங்கள் வருவது மிகமிகக் குறைவு. தமிழில் ஏற்கெனவே ‘எந்திரன்’ படம் வெளிவந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு இந்த மாதிரியான படத்தைப் பார்த்த அனுபவம் உண்டு.

ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு முன்பாகவே ஏ.ஆர்.முருகதாஸ் வியக்க வைக்கும் ஒரு அனுபவத்தை ‘ஸ்பைடர்’ படம் மூலம் கொடுக்கப் போகிறார் என்பது உறுதி.

வரி விலக்கிற்காக தமிழில் ‘ஸ்பைடர்’ படத்தின் பெயர் ‘சிலந்தி’ என்று மாறலாம் என்றெல்லாம் சந்தேகப்படத் தேவையில்லை. ஏனென்றால், ஜுலை மாதம் முதல் திரைப்பட டிக்கெட்டுகளுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருவதால் ஆங்கிலப் பெயர்களை வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சட்டமெல்லாம் போய்விட வாய்ப்புண்டு. அதனால், இனி பல ஆங்கிலப் படங்களின் பெயர்களை எதிர்பார்க்கலாம்.

 

Comments

comments