51767-xcqvqmnurh-1487427538

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்வதாக கூறி, அ.தி.மு.க.,வுடன், தி.மு.க., உறுப்பினர் மோதலில் ஈடுபட்டனர்.
சட்டசபையில், உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தி.மு.க.,வினர் ஏரி, குளம் துார் வாருவதை பற்றி விமர்சித்தார்.
அப்போது, பெரியகருப்பன் உள்ளிட்ட, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., சார்பில், மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களை துார் வாரும் நிகழ்ச்சி நடப்பதால், தங்கள் கட்சி செயல் தலைவரை கிண்டல் செய்கிறார் என, அவர்கள் கருதினர்.
அதனால், சபையின் முன் இருக்கைக்கு கும்பலாக வந்து, துணை சபாநாயகர் ஜெயராமனிடம் முறையிட்டனர்.
அப்போது, சபாநாயகர் தனபால், தன் இருக்கைக்கு வேகமாக திரும்பினார்.
அதற்கு, கலைச்செல்வன், ‘நான் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை; நான் பேசியதில் தவறு இல்லை’ என்றார்.
ஆனாலும், தி.மு.க.,வினர், அவர் பேசிய வார்த்தைகளை நீக்கும்படி, சபாநாயகர் தனபால் அருகில் சென்று, ஆவேசமாக முறையிட்டனர். பின், குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் நீக்க, சபாநாயகர் உத்தரவிட்டார்.

Comments

comments