2point0

எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0. ரஜினியுடன் ஹிந்தி நடிகர் அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 தயாராகி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என சுமார் 15 மொழிகளில் படத்தை டப்பிங் செய்ய உள்ளார்கள்.

பொதுவாக ஷங்கர் படங்கள் என்றாலே கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அவர் படம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், கதைகள் எதுவுமே வெளியாகாது. ஆனால் 2.0-வில் மாறுதலாக அக்ஷ்ய் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் லீக்காகின. இதையடுத்து ஷங்கர் பாதுகாப்பு கெடுபிடிகளை இன்னும் அதிகமாக்கினார். ஆனாலும் தற்போது 2.0 படத்தின் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரோபோ உடையில் ரஜினியும், எமியும் உள்ளனர். இதில் எமி ஒரு பஸ்ஸை இயக்க, ரஜினி அதை தள்ளுவது போன்று அந்த போட்டோக்கள் உள்ளன. இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி போட்டோக்கள் எப்படி கசிந்தன என படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

Comments

comments