இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா, பகத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

DBjrt5SUwAABRFK_18472

 

வேலைக்காரன் படத்தின் FIRSTLOOK தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் 1993ஆம் ஆண்டு வெளியான Falling Down, 2001ஆம் ஆண்டு வெளியான Joe Somebody படங்களின் போஸ்டரின் காப்பி தான் இந்த போஸ்டர் என சிலபேர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

1_12411

மோகன் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தின் கதை , மாதவனின் எவனோ ஒருவன், ஷங்கரின் சிவாஜி படத்தை போல ஒரு கதைக்கரு இந்த படத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதை வைத்து பார்க்கும் பொது கதைக்கு என்ன தேவையோ அதை தான் இந்த போஸ்டரில் வைக்க முடியும் என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று படத்தின் பெயரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு, நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. ’24 AM STUDIOS’ தயாரிக்கும் இந்தப் படம், செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

comments