1_3172003a

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்களான இது நம்ம ஆளு, கதகளி ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்த.எனவே, பட இயக்கத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு படத் தயாரிப்பில் இறங்கினார். அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம என்ற படம் பாண்டிராஜின் தயாரிப்பில் வளர்ந்தது.தற்போது செம திரைக்கு வர தயாராகிவிட்டது.

வள்ளிகாந்தின் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக பெண் தேடியபோது சந்தித்த அனுபவங்களை நகைச்சுவை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் சொல்லி இருக்கிறார். பாண்டிராஜுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே செம படம் தொடங்கப்பட்டது.லிங்க பைரவி கிரியேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து பாண்டிராஜ் தயாரித்திருப்பதோடு, செம படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

செம படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிப்பதோடுபடத்துக்கு இசையும் அமைத்துள்ளார். செம படத்தின் இசையை வரும் ஜூன் 9-ம் தேதி அன்று வெளியிட உள்ளனர். வெயில், ஆடுகளம், கொம்பன் படங்களுக்குப் பிறகு என்னிடமிருந்து கிராமத்து இசையில் செம ட்ராக் லிஸ்ட் இது என்று குறிப்பிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Comments

comments