_18494 (1)

இயக்குனர் சிறுத்தை சிவா-அஜித் கூட்டணி வீரம் படத்தில் அதிர்ஷ்டவசமாக கிளிக் ஆனாலும் ஆனது, சிவாவுக்கு வேறு நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பே தராமல் தனது பட வாய்ப்புகளையே தரும் அளவுக்கு அவரை தனது ஆஸ்தான இயக்குனர் ஆக்கிவிட்டார் அஜித். அது மட்டுமல்ல படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற ‘வி’ சென்டிமென்ட்டையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு அவர்கள் கூட்டணியில் உருவான இரண்டாவது படத்திற்கு ‘வேதாளம்’ என்றும் தற்போது இயக்கி வரும் மூன்றாவது படத்திற்கு ‘விவேகம்’ என்றும் டைட்டில் வைத்துள்ளதாகத்தான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது..

‘வி’ சென்டிமென்ட் வேண்டுமானால் ஒகே.. ஆனால் விவேகம் என டைட்டில் வைத்ததற்கு காரணம் அந்தப்படத்தில் அஜித்துக்கு இணையாக முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்து வரும் விவேக் ஓபராய் தான் காரணமாம். இந்தப்படத்தின் கதையை விவேக் ஒபராயிடம் சொல்வதற்காக சென்ற சிவா, கதையை சொல்லி ஓரளவு அவரை திருப்தியும் படுத்திவிட்டாராம்.. ஆனாலும் கொஞ்சம் யோசனையுடன் இருந்த விவேக்கிடம், இந்தப்படத்தின் டைட்டிலிலேயே உங்க பெயர் வரும்படி தான் (விவேகம்-விவேக் ஓபராய்) வைத்துள்ளேன்.. காரணம் நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும் என்பதால் தான் என அடுத்த அஸ்திரத்தை வீசினாராம் சிவா. உடனே மறுபேச்சு பேசாமல் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம் விவேக் ஓபராய்.. இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் விவேக் ஒபராயே சொல்லியிருக்கிறாராம்.

 

Comments

comments