_18494 (1)

விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில், தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக விஷால் குரல் கொடுத்து வருகிறார் .

இந்நிலையில், விவசாயிகளின் கடனை ரத்து செய்ய கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது….

ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள்(பழனிசாமி), தமிழ்நாட்டில் நமது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். நமது அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், மகாராஷ்டிராவில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநிலமும் விவசாய கடன்களை ரத்து செய்துள்ளது.

மற்ற மாநிலங்கள் செய்தது போன்று தமிழக அரசும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வறுமையை போக்கும் விதமாக கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு விஷால் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Comments

comments