sdgrsss_3176620f

“விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் புகழ்பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்தார்.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் இன்று (திங்கள்கிழமை) வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை திமுகவினர் சந்தித்தனர்.

அப்போது ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், “பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்த நிலை தொடர்ந்தால் திமுக காணாமல் போய்விடும் என்று சொல்லி இருக்கிறாரே?” எனக் கேள்வி கேட்டார்.

“யார் காணாமல் போகப்போகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் புகழ்பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன்” எனக் கிண்டலடித்தார்.

Comments

comments