625.372.560.350.160.300.053.800.666.160.90

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விநியோகஸ்தர்களை கடுமையாக சாடிப் பேசினார் விஷால்.

S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சுவாதி கொலை வழக்கு’. சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கையில் எடுத்திருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.

கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜ்மல். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடித்துள்ளார்.

ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், ” ‘சுவாதி கொலை வழக்கு’ எப்போது வெளியீடு என்பதை ஒரு மாதத்துக்கு முன்பே கூறிவிடுங்கள். தயாரிப்பாளர் சங்கமே உடனிருந்து அனைத்து விஷயங்களையும் செய்து கொடுக்கும். இந்த மாதிரியான படங்களுக்கு 175 திரையரங்குகள் கொடுக்கிறோம் என்று விநியோகஸ்தர்கள் சொல்வார்கள். வியாபாரமே இல்லை என்பதால் விநியோக கமிஷனில் செய்து தருகிறோம் என்பார்கள்.

தயாரிப்பாளருக்கே எந்த திரையரங்கில் வெளியிடப் போகிறோம் என்பது தெரியாது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வாங்கி கொடுப்பார்கள். அந்த நேரத்தில் திரையரங்க உரிமையாளரே திரையரங்கத்திற்கு வந்திருக்க மாட்டார். இரண்டாவது வாரம் படம் பிக்-அப்பாகி விடும் என்பார்கள். ஏனென்றால் அப்போது தயாரிப்பாளருக்கு வரும் பங்குத் தொகை குறைவு.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட எதிரிகளை விஷால் சேர்கிறார் என்கிறார்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த எதிரிகளை கடந்துதான் தமிழ் சினிமாவை நல்வழிப்படுத்த வேண்டியதுள்ளது. தமிழ் சினிமாவில் வருமானம் வருவதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. யு-டியூப்பில் ட்ரெய்லர் வெளியிட்டால் விளம்பரம் மட்டுமே என நினைக்கிறோம். ஆனால், அதிலும் வருமானம் வருகிறது.

தமிழ் திரையுலகில் வேலைநிறுத்தம் என்ற ஒரு விஷயத்தைக் கூறும் போது தான், புதரிலிருந்த எலிகள் எல்லாம் வெளியே வந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளருக்கு இவ்வளவு எதிரிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு வார்த்தையிலே கண்டுபிடித்துவிட்டோம்.

டிசம்பருக்குள் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். அதற்காக தான் பணிபுரிந்து வருகிறோம். எந்தவகை இடைஞ்சல்கள் வந்தாலும், எதிரிகள் குத்தினாலும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என்று தெரிவித்தார்.

Comments

comments