தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ரசிகர் படைகளை வைத்திருப்பவர் விஜய். அவரது படம் வெளியானால், தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் திருவிழா போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். கேரளாவில், “போக்கிரி சைமன்” என்று ஒரு படம் உருவாகி வருகிறது. விஜய்யின் மூன்று ரசிகர்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

MV5BZjIxZDE4ZmYtMjU2NC00OGYzLWJhNDctYzE0ZGU4ZTBlNjU3XkEyXkFqcGdeQXVyMjkxNzQ1NDI@._V1__21308

ஜிஜோ ஆன்டனி படத்தை இயக்குகிறார். இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்காக, “போக்கிரி சைமன்” குழுவினர் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

 

 

Comments

comments