0

விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, சாட்சி, நீதிக்கு தண்டனை, சட்டம் ஒரு விளையாட்டு என பல புரட்சிகரமான படங்களை இயக்கி புரட்சி இயக்குனர் என்று பெயர் எடுத்தார். தனது மகன் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, தேவா, ரசிகன், விஷ்ணு, செந்தூரப்பாண்டி, ஒன்ஸ்மோர் என இதுவரை 41 படங்களை இயக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அதோடு, டூரிங் டாக்கிஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், திரையுலகில் அவர் செய்த சாதனைகளை பாராட்டும் விதமாக அமெரிக்காவிலுள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதற்கான விழா இன்று(ஜூன் 17-ம் தேதி) சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

1497695645

1497695628 1497695606

Comments

comments