velli

இந்த ஆண்டின் மூன்றாவது வாரமாக அதிகபட்சம் வருகிற வெள்ளிக்கிழமை (16ந் தேதி) 10 படங்கள் வெளிவருகிறது. அதன் விபரம் வருமாறு:

மரகத நாணயம்: ஆதி, நிக்கி கல்யாணி நடிக்கும் படம். இது புதையலை தேடிக் செல்லும் திகில் கதை.

உரு: கலையரசன், தன்ஷிகா நடிக்கும் படம். இது ஒரு எழுத்தாளரின் திகில் அனுபவம்.

அதாகப்பட்டது மகாஜனங்களே: நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி அறிமுகமாகும் படம். ஒரு கிதார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு.

பீச்சாங்கை: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம். இடது கை பழக்கம் உள்ள ஒருவனுக்கு வரும் பிரச்சினைகள் பற்றிய கதை.

வெருளி: இதுவும் புதுமுங்கள் உருவாக்கி உள்ள கதை. இதன் ஒரு பகுதி படம் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது.

தங்கரதம்: ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட்டை மையமாக கொண்ட படம். இரு டெம்போ ஓட்டுனர்களின் தொழில்போட்டி கதை களம்.

இவைகள் தவிர காதல் காலம், எந்த நேரத்திலும் என்ற இரு சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. மலையாளத்தில் வெளிவந்து சரித்திர சாதனை படைத்த புலி முருகன் தமிழில் டப் செய்யப்பட்டு 3டியில் வெளிவருகிறது. இதுதவிர கார்ஸ் 3 என்ற ஆங்கிலப் படமும் வெளிவருகிறது.

Comments

comments