_18494 (1)

விஜய்யின் பிறந்தநாள் நேற்றைய தினம் அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதற்கு முன்தினம் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டீல் மெர்சல் என்பது அறிவிக்கப்பட்டது. அதோடு, ஜல்லிக்கட்டு வீரராக விஜய் போஸ் கொடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தனர். இந்தநிலையில், பல்வேறு திரைப்பிரபலங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், நடிகர் எஸ்.வி.சேகரும் தனது டுவிட்டரில் வீடியோ மூலம் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடின உழைப்பு என்றால் அது விஜய்தான். அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் எனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள். எல்லோரும் கிளம்பி வாங்க. அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வரக்கூடாது என்று சொல்வதெல்லாம் பயத்தில் சொல்லும் வார்த்தைகள்.

அரசியலுக்கு நல்லவர்கள் வரனும். நேர்மையானவர்கள் வரனும். மக்களின் கஷ்டத்துக்கு என்ன செய்யனும் அப்படின்னு தெரிஞ்சவங்க வந்தாலே போதும். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமாக நாம இருக்க வேண்டியதில்லை. எல்லாம் தெரிந்தவர்களை நாம் வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் நிர்வாகம் செய்யலாம். அதை வைத்துக்கொண்டுதான் சொல்கிறேன். விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. அது எப்போது என்பதை விஜய்தான் சொல்ல வேண்டும். எந்த நல்லவர்கள் வந்தாலும் என்னுடைய ஆதரவு அவர்களுக்கு உண்டு.

அதோடு, யார் கட்சி ஆரம்பிச்சாலும் உடனே உங்க கட்சிக்குள்ள வந்து நிற்பேன்னு யாரும் பயப்பட வேண்டாம். என்னைப்பொறுத்தவரை நாடு நல்லா இருக்கனும். நல்லவங்க இருந்தாலே போதும் நாடு நல்லா இருக்கும். அதனால வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு என்னோடு வாழ்த்துக்களை நான் இப்பவே தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

Comments

comments