_18494 (1)

ஜெயம் ரவியை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் வனமகன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிறு வயதிலிருந்தே காட்டுக்குள்ளே மிருகங்களுடன் வாழ்ந்த டார்ஜான் டைப்பான இளைஞனாக நடிக்கிறார் ஜெயம்ரவி.
காட்டுக்குள் வசிக்கும் ஜெயம்ரவி நகரத்துக்குள் வரும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் வனமகன் படத்தின் கதை. இப்படத்தின் கதை அம்சத்தை வைத்து டார்ஜான் படங்களின் தழுவலில் வனமகன் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவலாக பரவியது.
இந்நிலையில் வனமகன் எந்த படத்தின் தழுவல் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 1997ல் வெளியான ஜார்ஜ் இன் த ஜங்கிள் (george in the jungle) என்ற ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட கதையைத்தான் வனமகன் படமாக எடுத்திருக்கிறார் விஜய் என்று சொல்லப்படுகிறது.

Comments

comments