1_12411

ரஜினியே அழைத்தாலும், அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

விஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் மிஷ்கின் கூறியிருப்பதாவது, “ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு.

எனது படத்தின் நாயகன் படத்தில் 3 பேரை அடிப்பான், அவருடைய படத்தில் 300 பேரை அடிப்பார். என்னுடைய சினிமா எதார்த்தமும், அவருடைய சினிமா எதார்த்தமும் வேறு” என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

Comments

comments