1_12411

காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பையே கூட சர்வ சாதாரணமாக கசிய விட்டுவிட்டார் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்! இந்தியாவே அதிசயப்படுகிற ரஜினியின் படமும், அதில் வரும் காலாவின் கெட்டப்பும் இவ்வளவு சிம்பிளாக இருக்க… ஜி.வி.பிரகாஷின் கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்று டைரக்டர் பாலா மூடி மூடி அனுப்பினால், வாயை மூடாமல் ஒரு வாரத்துக்கு சிரிக்காமல் வேறென்ன செய்வதாம்? மனம் போல சிரிச்சுருங்க மக்களே…

‘செம’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், அந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது தலையை மறைத்து ஏதோ ஒரு துணியை கட்டிக் கொண்டு வந்திருந்தார். (சாம்பிராணி பாய் போல செம கெட்டப்புய்யா அது!?) சரி அதை விடுங்க. இந்த படத்தை பசங்க பாண்டிராஜ் தயாரிக்க, அவரது உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடி அர்த்தனா.

விழாவில் டைரக்டர் பார்த்திபன் பேச்சுதான் வழக்கம் போல அசத்தல். “ஜி.வி என்றால் ‘கேர்ள்ஸ் வியூ’. பெண்களின் பார்வை ஜிவி பிரகாஷ் மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும், சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால் சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான், சம்சாரி புலியுடனே தூங்குபவன். அப்படி புலியுடன் தூங்குபவர்தான் ஜி.வி.பிரகாஷ்” என்று பார்த்திபன் வர்ணிக்க, மேடைக்கு எதிரே உட்கார்ந்திருந்த ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவியின் முகத்தை பார்க்க வேண்டுமே?

இப்படி உசுப்பியே உசுப்பியே கட்டபுள்ளைகளையெல்லாம் கட்டபொம்மன் ஆக்குறாங்களேப்பா…

Comments

comments