[

நாகர்கோவில்:ரஜினிகாந்த் அரசியலில் கூறும் கருத்துக்களை பெரிதாக்கி அவருக்கு தர்மசசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்று இல. கணேசசன் எம்.பி. கூறினார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த வேட்பாளர். பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 60 சதவீத ஒட்டுகள் உள்ளதால் அவர் வெற்றி பெறுவார். எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் அவர் ஏகமனதாக தேர்வாவதற்கு வாய்ப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறாமல் இருப்பதற்காக அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது இயக்கம் மதமாற்றத்துக்கு ஆதரவான இயக்கமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கருதுகிறேன். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை விவாதத்துக்கு கொண்டு வருவது நல்லதல்ல. ஜனாதிபதி தேர்தலில் தமிழக முதல்வரிடம் ஆதரவு கேட்டுள்ளோம். முடிவு செசய்ய வேண்டியது அவர்கள்தான்.

உலக யோகா தினத்தில் பீகார் அரசு பங்கேற்காது என்று நிதிஷ்குமார் கூறியிருப்பது துரதிஷ்டவசசமானது. இது மக்கள் இயக்கம். யோகாவுக்கு மொழி கிடையாது. உடலையும், மனதையும் இணைக்கும் பயிற்சியாகும். தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் அளிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்த குற்றச்சசாட்டு நிரூபிக்கப்பட்டால் தமிழகத்துக்கு தலைக்குனிவு. தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ., கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி என்று கூறுவதை ஏற்க முடியாது.

நிரந்தர கவர்னர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. தனியார் பால் மட்டுமல்ல ஆவின் பால் தரத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வழிவகை செசய்ய வேண்டும். டாஸ்மாக் கடையை மூடினாலும் வருமானம் குறையவில்லை என்று கூறும் தமிழக அரசு மேலும் கடைகளை திறக்க முயற்சிப்பது ஏன்? இதை அரசு சிந்திக்க வேண்டும். ரஜினிகாந்த் நல்ல மனிதர். அவர் அரசியலில் கருத்து கூறுகிறார். அதை பெரிதாக்கி அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

comments