இந்த வருசம் தொடங்குனதுல இருந்து ட்ரெண்டிங்ல இருந்தவங்களோட லிஸ்ட் எடுத்தோம். முடிஞ்ச இந்த ஆறுமாசத்துல வைரல் ஹிட் ஆனவங்க எல்லோரும் இந்த லிஸ்ட்ல வந்துட்டாங்களானு செக் பண்ணிக்கோங்க. அப்படியே இந்தப் பத்துப் பேரையும் டாப் ஆர்டர்ல உங்க எண்ணம்போல வரிசைப்படுத்திடுங்க. 

collage_10_16218

யோகி ஆதித்யநாத்

போனவருஷம் வரைக்கும் பக்கத்து மாநில மக்களுக்கே யார்னு தெரியாம இருந்தவருக்கு 2017-ல் உச்சத்துல இருக்கு குரு. பா.ஜ.க-வோட அடுத்த அதிகாரமா வளர்ந்து நிக்கிறார் யோகி. மாட்டுத் தொழுவம் திறந்து வைக்கிறதுல இருந்து மாட்டுக்கறிக்குத் தடை வரைக்கும் தொட்டதெல்லாம் பஞ்சாயத்து. இதோட உச்சமா விவேகானந்தர் பேர்ல வர்ற வாட்ஸ்-அப் ஃபார்வர்டு மெசேஜ்களையெல்லாம் யோகிநாத் பேர்ல எழுதுனாய்ங்க. மாற்றுத்துணி இல்லை… சாப்பாட்டுக்கே வழி இல்லைனு பரவுன ஃபார்வர்டுகளால அவரே கண்ணுல தண்ணி விட்டிருப்பார்.

தீபா – மாதவன்

போன வருசம் வரைக்கும் நமக்குத் தெரிஞ்ச ஒரே மாதவன் அலைபாயுதே கார்த்திக்தான். ஆனா அந்த மாதவனையே செகண்ட் டவுனுக்குத் தள்ளிட்டு உற்சாகமா உள்ளே நுழைஞ்சார் மாதவன். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கணும்னு தீபா கட்சி தொடங்க, நாமளும் கண்டுபிடிப்போம் என இன்னொரு கட்சியைத் தொடங்கி, ‘ஜினல்… ஜினல்… இதுதான் ஒரிஜினல். மத்ததெல்லாம் டூப்பு’ என கொளுத்திவிட்டார். பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைப்பாங்கனு பார்த்தா குடும்பத்துக்குள்ளேயே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடந்து ஆல்வேஸ் லைம்லைட் மோட்லயே இருந்தாங்க.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா அமைச்சரவையில், கூட்டத்தில் ஒருவராக இருந்தவர் இன்று தமிழக முதலமைச்சர். எடப்பாடியில் இருந்து இந்த இடத்திற்கு வருவதற்குள் சேம் டீமுக்குள் இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் ஏராளம். செங்கோட்டையன்  மியூசிக் சேர் ஆட்டத்தில் இருக்கும்போதே ட்ரிக்காக அவுட்டாக்கி சீட்டைப் பிடித்தார். பதவி கைக்கு வந்ததும், சசிகலா தினகரனை ஓரங்கட்ட ஒப்புக்கொண்டவர், இப்போது நாற்காலியை இன்னும் அழுத்தமாக இழுத்துப் போட்டிருக்கிறார். அமைச்சர்களின் அறைகளில் இவரது படத்தை மாட்ட உத்தரவிட்டிருக்கிறார்.

ஓ.பி.எஸ்

எடுப்பார் கைப்பிள்ளையாக பவ்யம் காட்டிய பன்னீர்செல்வம் விஸ்வரூபம் எடுத்தது இந்த வருடத்தில்தான். சசிகலா குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டு பரபரப்பைக் கிளப்பியவரால் அடுத்தடுத்த அதிரடிகள் நடந்தன. ஆளுங்கட்சிக்குள் சிலபல அணிகள் உருவாகி கட்சியே ஆட்டம்கண்டதற்கும் ஆரம்பப்புள்ளி பன்னீரின் தியானம்தான். கடைசியில் எல்லாம் ‘குழாயடியில உருண்டு என்ன பண்ண… கோயில் வாசல்ல போயில்ல உருளணும்’ மொமென்ட் ஆகிப்போனது.

ஸ்டாலின்

போன வருசமே சைக்கிள் ஓட்டுறது, சைட்ல நிக்கிற பொதுமக்களோட செல்ஃபி எடுக்குறதுனு பயங்கர எனர்ஜியோட சுத்துனவருக்கு ஆட்சிக் கட்டில் வசப்படவில்லை. அப்புறம் ஆளுங்கட்சியின் ராவடி பஞ்சாயத்துகளை வேடிக்கை பார்க்கவே நேரம் இல்லாமல் திரிஞ்சவருக்கு சட்டசபையில் சட்டை கிழிஞ்ச சம்பவம் சரியான தீனி. அதை வெச்சே ஒருவாரத்தை ஓட்டினவர், இப்பயும் சண்டைக்காரங்க அடிச்சிக்கிட்டா நாம போய் சீட்ல உக்கார்ந்துக்கலாம் மனநிலையோடே இருக்கிறார். நீங்களா பார்த்து ஏதாவது நம்பரைக் கொடுங்க.

மோடி

மோடிக்கு இது முதல் வருஷம் இல்லைன்னாலும் அகாதுகா அறிவிப்புகளால இந்த வருசமும் ட்ரெண்டிங்லயே இருக்கார். போன வருசக் கடைசியில் போட்ட டீமானிட்டைசேஷன் வெடிகுண்டுக்கே இந்த வருசமும் புகை வந்துக்கிட்டு இருந்துச்சு. அதுவும் போதாதுனு மாட்டுக்கு ஆதார், மாட்டுக்கறிக்குத் தடைனு இந்த வருசமும் ப்ளு பிரின்ட்டை க்ளியரா போட்டு செயல்பட்டுக்கிட்டு இருக்கார். அதுக்கு இடையில தமிழகத்துக்குள்ள கட்சி வளர ரூட்டைப் போட்டுக் கொடுக்க, ரோடு போட்ற வேலையில் மொத்தக் கட்சியும் பிஸி.

collage_11_16146

தினகரன்

அரசியலை விட்டும், அ.தி.மு.க-வை விட்டும் விலகி இருந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னாடி முன்னாடி வந்தாரு. சசிகலா ஜெயிலுக்குப் போனதும், கெத்தா என்ட்ரி கொடுத்தவர் ஆர்.கே.நகர் தேர்தலில் கொடுத்த அலப்பறைகள் திருமங்கலத்தையே தூக்கிச் சாப்பிடும். எடப்பாடிக்கு நல்லநேரமோ…  தமிழகத்திற்கு நல்லநேரமோ தேர்தல் கமிஷனுக்குக் கமிஷன் கொடுத்த வழக்கில் கைதாகினார். அந்த கேப்பில் அ.தி.மு.க அமைச்சர்கள் தினகரனை ஓரமாக உட்காரவைக்க, ‘நீயா நானா’ கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் தொடர்கிறது.

தமிழிசை

டாக்டர் என்பதாலோ என்னவோ காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தவறாமல் அறிக்கைவிடும் தமிழிசை அக்கா, இந்த வருடத்தில் இதுவரை விட்ட அறிக்கைகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்திச் சொச்சம். மோடியில் தொடங்கி எச்.ராஜா, பொன்னார் வரை எல்லோரின் பேச்சுகளுக்கும் முட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் வேறு. கடைசியாக, அவரது பிறந்தநாளுக்குப் பிசைந்துகொடுத்த கேக் வரை அக்கா தொட்டதெல்லாம் ட்ரெண்ட்! பேசியதெல்லாம் வைரல்!

ரஜினி

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவது குறித்து குண்டக்க மண்டக்கப் பேசிவரும் ரஜினி இந்த வருடமும் அதே அதே. அவர் அரசியலுக்கு வரப்போவதாகக் கிளம்பியபோது ஸ்கூல் சேர்ந்த குழந்தைகளின் குழந்தைகளே இப்போது ஸ்கூலுக்குப் போகின்றனராம். இந்த வருடமும் அரசியலுக்கு வருவதைப் போல வாய்ஸ் கொடுத்தவர், பிறகு வழக்கம்போலப் பின்வாங்கி, போர் வரும்வரை காத்திருப்போம் எனத் தள்ளிப்போட்டிருக்கிறார். வரும் வரும்..!

சசிகலா

கடந்த ஆண்டு இறுதியில் கிரவுண்டுக்கு வந்த சசிகலா இந்த ஆண்டு தொடங்கிய சிலநாட்களிலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தாலும், களத்தில் அவர் நின்ற ஒவ்வொரு நாளும் அதிரடிக்குப் பஞ்சமில்லை. சிறைக்குச் செல்லும் நாள் வரை கரகரவெனச் சுற்றிக்கொண்டிருந்தவர் போகும்போதும் ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்து கன்டென்ட் தந்துவிட்டுப் போனார். இப்போதும், அ.தி.மு.க-வில் நிலவும் அத்தனை களேபரங்களும் சசிகலாவின் கண்ணசைவுக்குக் கட்டுப்படும்.

Comments

comments