0

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ’துவ்வாடா ஜகன்னாதம்’ படம் ஒரே நாலில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளது. படத்தயாரிப்பாளர்கள் இதை உறுதிசெய்துள்ளனர்.

தெலுங்கு படமான ’துவ்வாடா ஜகன்னாதம்’ 23ஆம் தேதி வெளியானது. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்ட் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

முதல் நாளின் இந்த அசாதரணமான வசூல், அல்லு அர்ஜுனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய துவக்கங்களில் ஒன்று என தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் அன்றும் ரம்ஜான் நாள் என்பதால் விடுமுறை இருப்பதால், படத்தில் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments