_18494

செல்வராகவன், தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர். என்னதான் வித்தியாசமான படமாகக் கொடுத்தாலும் கடைசியில் அந்தப் படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் பெற்றது, எவ்வளவு லாபத்தைக் கொடுத்தது என்றுதான் சினிமாவில் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் செல்வராகவன் கடைசியாக இயக்கிய ‘புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகிய நான்கு படங்களுமே தோல்விப் படங்கள்தான். அவரின் முதல் இரண்டு படங்களான ‘காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்கள்தான் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள்.

‘இரண்டாம் உலகம்’ படம் தவிர்த்து அவர் இயக்கிய ‘புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் இன்றும் சிலாகித்துப் பேசப்படும் படங்கள் தான். சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் அடுத்த வாரம் ஜுன் 30ம் தேதி வெளியாக உள்ளது.

மீண்டும் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி, எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா என செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் நட்சத்திரங்கள் என அப்படத்திற்கு சில சிறப்புகள். பேய்ப் படமாக இருந்தாலும் இது செல்வராகவன் படம் என சொல்ல வைக்கும் படமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மூலம் செல்வராகவன் மீண்டும் பேசப்படுவார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 

Comments

comments