NTLRG_20170629141429847523

செல்போன்களில் பரிமாறப்படும் ஆபாச படங்கள் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நிறைய படங்கள் வெளிவந்திருக்கிறது. நிறைய படங்கள் தயாரிப்பிலும் இருக்கிறது. அந்த வரிசையில் 88 என்ற படமும் தயாராகி உள்ளது. 96, 1818, 143 என பல படங்கள் எண்களில் டைட்டில் வைத்து தயாராகி உள்ளது. இந்தப் படத்திற்கும் 88 டைட்டில் வைத்துள்ளனர்.

ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் சார்பில் ஏ.ஜெயக்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் எம்.மதன் இயக்குகிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். உபாஷ்னாராய் என்ற புதுமுகம் ஹீரோயின். டேனில் பாலாஜி, ஜெயபிரகாஷ், ஜி.எம்.குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். வெற்றிமாறன் ஒளிப்பதிவு செய்கிறார், தயாரத்னம் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் மதன் கூறியதாவது:

இன்று விஞ்ஞானம் றெக்கக் கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..

அதிலும் பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேச கூடாது என்பது தான் இந்தப் படத்தின் ஹைலைட் கதை. இதை கமர்ஷியல் கலந்து ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம். சென்னை மற்றும் ஆந்திரா, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஜுலை 14 ம் தேதி படம் வெளியாகிறது என்கிறார் மதன்.

Comments

comments