_18494

விஜய் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ, அல்லது அஜித் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களுக்குள் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும், இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவருமே எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள்.

விஜய்யாவது அவருடைய படங்களைப் பற்றிப் பேசுவதோடு, விவசாயிகள் பற்றியும் பேசுகிறார். அதேசமயம் அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் பேசுவதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார். அஜித் அவருடைய படத்தைப் பற்றியும் பேச மாட்டார், நாட்டு நடப்புகளைப் பற்றியும் பேச மாட்டார், ஏன் அவருடைய ரசிகர்களைப் பற்றியும் கூட பேசமாட்டார்.

இன்று மாலை விஜய் நடிக்கும் 61வது படத்தின் முதல் பார்வை, தலைப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்கு என்ன பெயர் வைத்து வந்தாலும் அதைக் கிண்டலடிப்பதற்கென்றே அஜித் ரசிகர்கள் இப்போதே காத்துக் கொண்டிருப்பார்கள். விஜய் 61 படத்தின் ஷுட்டிங் புகைப்படங்கள் லீக் ஆன போதே இது ஆரம்பமாகிவிட்டது தனிக் கதை.
விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போது ‘பை ரவா’ (Buy Rava) என கிண்டடிலத்தார்கள்.

அவருடைய ஹேர்ஸ்டைல் முதல் கொண்டு விமர்சனம் செய்தார்கள். அதே சமயம் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் முதல் பார்வை, தலைப்பு வெளியான போது, தலைப்பைக் கிண்டலடிக்க முடியவில்லை. இருந்தாலும் அஜித்தின் சிக்ஸ் பேக் தோற்றம் ‘கிராஃபிக்ஸ்’ என்று சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
‘விவேகம்’ டீசர், சிங்கிள் பாடல் ஆகியவை தற்போது சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் 61வது படத் தலைப்பு இன்று மாலை என்ன ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதற்கு இன்னும் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

Comments

comments