0

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்துள்ள படம் “மாம்”. ரவி உதயவார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே தயாரித்திருக்கிறார். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். மாம் படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக சென்னை வந்திருந்த ஸ்ரீதேவி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்…

தமிழ்நாடு எனக்கு நிறைய அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கிறது. தாய்க்கும், மகளுக்கும் இடையேயான ஒரு உணர்வுப்பூர்வமான படம் தான் மாம். இன்றைக்கு பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்கள் வெளியே சென்று திரும்பி வரும் வரை பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கதை உலகம் முழுக்க பொருந்தும். படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் சமர்பிக்கிறேன்.

ரஹ்மான் இசையமைத்ததும் படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. நான் வாழ்க்கையில் உயர்ந்ததற்கு என் அம்மா ராஜேஸ்வரி தான் காரணம். அவர், என்னை வளர்த்ததில், 50 சதவீதம், நான் என் குழந்தைகளை வளர்த்தாலே பெரிய விஷயம்.

Comments

comments