001_14046

ஒய்நாட் ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் விக்ரம் வேதா. மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ளனர். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பிரஸ்மீட்டில் பேசிய விஜய் சேதுபதி…

இந்த விக்ரம் வேதா படத்தின் கதையை 2014ல் கேட்டேன். இப்போது படம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்தின் ரசனை பெரியது. ரசனை அவருக்கு ஒரு போதை மாதிரி. ஒரு தயாரிப்பாளருக்கு அந்த போதை ரொம்ப முக்கியம் என்பதால், அவர் என்றைக்கும் இப்படியே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இந்த படத்தில் மேடியுடன் நடித்தது பற்றி சொல்ல வேண்டுமென்றால், படத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் எது முதல் காட்சியோ, அது தான் முதல் நாளில் படமாக்கப்பட்டது.

அவரை சந்திப்பதற்கு முன்பு ஒருவித பயத்தில் இருந்தேன். சீனியர் நடிகர், பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்தவர், அவர் வந்தால் எப்படியிருக்கும். கண்ணை பார்த்து பேசினால் அவர் என்ன ரியாக்ட் பண்ணுவார். இப்படி பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்தபோது இருட்டாக இருந்த வீட் டிற்குள் லைட் போட்ட மாதிரி பிரகாசமாயிடுச்சு. எதுவாக இருந்தாலும் அவரிடம் ஷேர் பண்ணலாம். சீனியர் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை. சீனைப்பற்றி பேச முடிந்தது. ஒன்றாகவே படிச்சு, ஒரே தெருவில் வசித்து, ஒரே அலுவலகத்தில் வேலை செய்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் மாதவனுடன் நடித்தது அனுபவம் இருந்தது என்றார்.

Comments

comments