NTLRG_20170606162640960314

சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்தது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தவிர திரையுலக பிரபலங்களும் இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோகன்லால் தான் தற்போது நடித்துவரும் ‘வெளிப்பாடிண்டே புத்தகம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.

இன்னொரு பக்கம் மெகாஸ்டார் மம்முட்டியும் மரம் நடும் பணிகளில் ஆர்வம் காட்டி களத்தில் இறங்கினார். பள்ளி மாணவிகளுடன் மரம் நடும் பணியில் இறங்கிய அவர் மரம் நடுதலின் அவசியத்தையும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டியதன் விழிப்புணர்வையும் விளக்கினார். இப்போது மட்டுமல்ல கடந்த 2014ல் கூட எல்லோரும் வட்டார் பக்கெட் சேலஞ்ச் விட்டுக்கொண்டிருந்தபோது, மம்முட்டியோ மரக்கன்றுகளை நட்டுவைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என சக திரையுலக பிரபலங்களுக்கு சவால் விட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 

Comments

comments