ருவனந்தபுரம்: மாட்டிறைச்சி தடை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தில் பங்கேற்பதற்கு முன், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் சூடான மாட்டிறைச்சி வறுவலை ருசித்தனர்.

Tamil_News_large_1786426_318_219

விவாதம்:

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்தது. இதற்கு கேரள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் பேரணி நடந்து வருகிறது. இது குறித்து விவாதிக்க, சட்டசபை சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் முன்னர் கேன்டீனில் சூடான மாட்டுக்கறி வறுவலை ருசித்து சாப்பிட்டனர்.

முதல் ஆளாக…:

இது தொடர்பாக கேன்டீன் ஊழியர் ஒருவர் கூறுகையில், வழக்கமாக சட்டசபையில் மாட்டுக்கறி காலை 11 மணிக்குமேல் தான் பரிமாறப்படும். இன்று மாட்டுக்கறி தொடர்பான விவாதம் நடைபெற இருந்ததால், அதிகாலையில் 10 கிலோ மாட்டுகறி வாங்கி வந்து சமைத்தோம். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் விவாதத்தில் கலந்து கொள்ள செல்லும் முன்னர் மாட்டுக்கறி வறுவலை ருசிபார்த்துவிட்டு சென்றனர். முதல் ஆளாக தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,எஸ்.ராஜேந்திரன் சாப்பிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

comments