supreme-court-ap-759_11485

சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத்  தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

 

அரசின் இந்த அறிவிப்புக்கு கேரளா, பீகார், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துவிட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இறைச்சி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, இறைச்சி தடைஉத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளது. இறைச்சி தடை விவகாரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Comments

comments