0

ஒன்றல்ல, இரண்டல்ல… மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் சுமார் 55 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 56வது முறையாக இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்கிற செய்தி கடந்த சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது ஆனால் இணைந்து நடிக்க மோகன்லால் தயார் தான்.. ஆனால் மம்முட்டிதான் தயக்கம் காட்டுகிறார் என்றும் சொல்லப்பட்டது… தற்போது இவர்கள் இருவரையும் இணைத்து படம் இயக்கும் வேலையில் இயக்குனர் ரபி மெக்கார்டின் ஈடுபட்டுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

இந்தப்படத்திற்கு ‘ஹலோ மாயாவி’ என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. அதென்ன ஹலோ மாயாவி.. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்றால் இந்த டைட்டிலின் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன் அதாவது 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான மாயாவியும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹலோ’வும் மிகப்பெரிய வெற்றி பெற்று நூறு நாட்களை தாண்டி ஓடின.. அந்த வருடத்திய வசூல் சாதனையில் முதல் இரண்டு இடத்தையும் பிடித்தன. அதுமட்டுமல்ல இந்த இரண்டு படங்களின் கதையை எழுதியதும் ரபி மெக்கார்டின் தான் அதனால் இரண்டையும் இணைத்து புதிய படத்தின் டைட்டிலாக மாற்றிவிட்டாராம்.

Comments

comments