_18494 (1)

திரைத்துறையில் கணக்கில் வராத கருப்புப்பணம் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தின் மூலம் திரைப்படம் தயாரித்து, நடித்து வந்த நடிகர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் கடந்த சில நாட்களாக வலைவீசி வந்த நிலையில் ஏரிப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சிவமணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிவமணி என்பவர் ‘திட்டமிட்டபடி’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் அவரே நடித்துவந்ததும் தெரியவந்தது. இந்த திரைப்படத்தில் மேகா ரத்னாகரன் என்பவர் நாயகியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சிவமணியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Comments

comments