_18494

அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளா படம் ‘விவேகம்’. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழு, படத்திற்கான Post Production வேலைகள், மற்றும் டப்பிங் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

“சோனி மியூசிக் சௌத்” நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டு உறுதிசெய்துள்ளார். மேலும் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், என்னைஅறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து ஆறாவது படமாக விவேகத்தையும் சோனி மியூசிக் வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், வேதாளம் படத்தில் அனிருத் இசையில் வெளிவந்த ‘ஆலுமா டோலுமா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து பெரும் வெற்றி பெற்றதைப்போல், இப்படத்தின் அனைத்து பாடல்களும் உறுதியாக பெரும் வரவேற்பையும், வெற்றியும் பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments

comments