existing-legislative-buildi

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் பேச அனுமதி மறுத்து, மைக் துண்டிக்கப்பட்டதால், வெளியில் இருந்து மொபைல் ஒலிபெருக்கி கொண்டு வந்து பேசிய, என்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ.,க்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுஉள்ளனர்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசை
வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

கடும் அமளி : அப்போது குறுக்கிட்ட, என்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து, ”சென்னை ஐகோர்ட்டில், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக, தீர்ப்பு வெளியாகியுள்ளது; நியாயம் வென்றுள்ளது. ”கவர்னர் முயற்சியால், முதுநிலை மருத்துவத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள, கோர்ட் உத்தர விட்டுள்ளது. இப்பிரச்னையில், யார் மன்னிப்பு கேட்க போகின்றனர்,” என்றார். என்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ., ஜெயபாலும் எழுந்து பேசினார்.
இதனால், கோபமடைந்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்., – எம்.எல்.ஏ.,க்கள், ஒரே நேரத்தில் எழுந்து, அசோக் ஆனந்து பேச்சுக்கு
எதிர்ப்பு தெரிவித்து,
கடுமையாக வாதிட்டனர். சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
முதல்வர் நாராயணசாமி, ”என்.ஆர்.காங்., ஆட்சியில், ஒரு இடத்தைக்கூட அரசு ஒதுக்கீடாக பெறவில்லை. மாணவர்கள் நலன் கருதி, எங்கள் அரசு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை சட்டசபையில் வைக்காதீர்கள். கவர்னரின்
ஏஜன்டாக செயல்
படாதீர்கள்,” என்றார்.
மீண்டும் பேச முயன்ற அசோக் ஆனந்து, ஜெயபால் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மைக் இணைப்பு
துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டசபையில் இருந்து வெளியேறிய அசோக் ஆனந்து, தன் காரில் வைத்திருந்த மொபைல் ஒலிபெருக்கியை எடுத்து வந்து, சட்டசபையில்
பேசினார். உடனிருந்த ஜெயபால், எம்.எல்.ஏ.,
விடமும், கொடுத்து
பேசும்படி கூறினார்.
உச்சகட்ட பரபரப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சத்தம் போட்டனர். சபாநாயகர் வைத்திலிங்கம், அசோக் ஆனந்திடமிருந்து ஒலி
பெருக்கியை பறிக்கும்படி, சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஒலிபெருக்கியை பறிக்க முயன்ற போது, சபை
காவலர்களுக்கும், என்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது,
அசோக் ஆனந்து, ஒலி
பெருக்கியின் சைரனை ஒலிக்க செய்தார்.
இதனால், காங்., –
எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக ஓடி வந்தனர். சட்டசபையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக, அசோக் ஆனந்திடமிருந்து ஒலி
பெருக்கி பறிக்கப்பட்டது.
‘சட்டசபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட, என்.ஆர்.காங்., – எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, காங்., – எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மற்றும் சபாநாயகரை வலியுறுத்தினர்.
சபாநாயகர் உத்தரவு
இதையடுத்து, அசோக் ஆனந்து மற்றும் ஜெயபால் இருவரையும்,
சட்டசபையில் இருந்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக, சபாநாயகர் உத்தரவிட்டார். சட்டசபை அரங்கை விட்டு வெளி
யேறிய இருவரும், சபை
வளாகத்தில், எம்.எல்.ஏ.,க் கள் ஓய்வெடுக்கும்
இடத்தில் அமர்ந்தனர்.
அவர்களை சட்டசபை வளாகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என, சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, சபை காவலர்கள், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Comments

comments