p76a_(1)_14525_19544

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் வந்துவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்வதே பெரும் வேலையாகிவிடும் பெற்றோருக்கு. பிள்ளைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே வாசலில் வேன் வந்து நின்றுவிடும். அதன்பிறகு நடப்பவை எல்லாம் ஜெட் வேகத்தில்தான். அப்படியான சூழல்களில் சில விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று சிரமப்படுவர். அதனால் ஒரு செக் லிஸ்ட் வைத்து செக் பண்ணலாமே. அதில் இடம்பெற வேண்டிய 10 விஷயங்கள் இதோ:

1. புத்தகங்கள்: அன்றைய தினத்தின் டைம் டேபிளின்படி புத்தகங்களை ஸ்கூல் பேக்கில் சரியாக எடுத்து வைத்திருக்கிறார்களா எனச் சோதிப்பதே முதல் வேலை. ஏனெனில் முந்தைய தினம் பள்ளியிலிருந்து வந்ததும் படிப்பதற்கு அல்லது ஹோம் வொர்க் செய்வதற்கு என எடுத்த புத்தகங்களை மேஜை மீதே வைத்திருக்க வாய்ப்பு உண்டு.

2. ஹோம் வொர்க் நோட்: இது மிகவும் முக்கியம். உங்கள் பிள்ளை, சிரமப்பட்டு செய்த ஹோம் வொர்க்கை ஆசிரியரிடம் காட்ட, அந்த நோட்டைப் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் அல்லவா. அதனால் ஹோம் வொர்க் நோட் இருக்கிறதா என்றும் ஹோம் வொர்க் முழுமையாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் செக் பண்ண மறக்க வேண்டாம்.

3. லஞ்ச் பாக்ஸ்: லஞ்ச் பாக்ஸை எடுத்து வைத்திருப்பார்கள். ஆனால், சரியாக மூடாமல் விட்டிருப்பார்கள். ஸ்நாக்ஸ் பாக்ஸை மறந்திருப்பார்கள். மறக்காமல் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வையுங்கள். நீர் கசிந்து விடாமல் நன்கு மூடவும். பிள்ளையின் உணவு விஷயம் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

4. ஷூ: நேரமாகி விட்டதே என அவசரம் அவசரமாக ஷூவை அணிந்துகொள்வார்கள். ஆனால், அதனுள் பூச்சிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனச் சோதிப்பது பல வீடுகளில் கிடையாது. ஒருவேளை ஷூவினுள் பூச்சிகள் இருக்கும்பட்சத்தில் பிள்ளைகள்தாம் கடுமையான வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் ஷூ அணிவதற்குமுன் அவசியம் செக் பண்ணவும்.

5. கடிதம்: உங்களின் பிள்ளை, பள்ளியிலிருந்து முந்தைய தினம் வரும்போது ஆசிரியர் ஏதேனும் கடிதம் கொடுத்தனுப்பிருக்கலாம் அல்லது டைரியில் குறித்துக்கொடுத்திருக்கலாம். அதில் குறிப்பிட்டுள்ளவற்றை நிவர்த்திச் செய்திருக்கிறீர்களா என்பதை செக் பண்ணுங்கள். ஒருவேளை உங்களின் பிள்ளை மறதியினால்கூட அதை உங்களிடம் காட்டாமல் இருந்திருக்கலாம். எனவே கவனம் தேவை.

bookreading250_13080_19208

6. பாத்ரூம்: பிள்ளையை நன்றாக சாப்பிட வைப்பதுபோலவே காலைக் கடன்களைக் கழித்திருக்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். ஹோம் வொர்க் செய்யும் டென்ஷனில் அல்லது விளையாடிக்கொண்டோ பாத்ரூம் செல்லாமல் பள்ளிக்குப் புறப்பட்டு விட்டிருப்பார்கள். இது தவறு. எனவே பாத்ரூம் சென்றதை உறுதிப் படுத்திக்கொள்ள வெட்கப்படக் கூடாது.

7. மருந்து: உடலுக்குச் சரியில்லாமல் இருப்பது அல்லது தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் குழந்தை எனில் ஒருமுறைக்கு இருமுறை மருந்து எடுத்துகொண்டாரா என்று கேட்டு உறுதி செய்துகொள்ளவும். பள்ளிக்கு மருந்து எடுத்துச் செல்லும் நிலையில் இருந்தால் மறக்காமல் எடுத்து வைக்கவும்.

8. ஐடி கார்டு: பெரும்பாலான பிள்ளைகள் பள்ளியில் தலைகுனிந்து நிற்க ஐடி கார்டை மறந்துவிட்டு வருவதே காரணமாக இருக்கிறது. அதனால், ஐ.டி கார்டை மறக்காமல் எடுத்து வைக்கவும்.

9. பாக்கெட் மணி: பாக்கெட் மணி என்றவுடன் செலவுக்குப் பணம் கொடுப்பது அவ்வளவு முக்கியமா என நினைக்க வேண்டாம். பள்ளியில் சக மாணவர்கள் ஏதேனும் வாங்கிச் சாப்பிடும்போது உங்கள் பிள்ளை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க அவசியம் குறைவான தொகை என்றாலும் மறக்காமல் கொடுங்கள்.

10. நேரம்: மேலே சொல்லியவற்றை எல்லாம் சரியான நேரத்தில் முடிப்பது எல்லாவற்றையும்விட முக்கியம். ஏனெனில் நேரம் தாமதமானால் எதையும் செக் பண்ணாமல் ஸ்கூல் வேனில் ஏற்றிவிட்டுவிடுவோம். அதன்பின் ஒவ்வொன்றுக்கும் உங்கள் பிள்ளை சிரமப்படுவர். எனவே சரியான நேரத்தில் பிள்ளை பள்ளிக்குத் தயார் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதே நல்லது.

Comments

comments